டயானா கமகே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சட்டத் தகைமை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என சமூக ஆர்வலர் ஓஷலா ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

குமுதுனி விக்கிரமசிங்க, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.