முன்னாள் கடல் புலி உறுப்பினர் கிளைமோர் குண்டுடன் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் முன்னால் கடல் புலி உறுப்பினர் ஒருவர் கிளைமோர் மற்றும் வெடிமருந்துகளுடன் ராணுவ புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளேமோர் குண்டு தவிர, டி-56 14 தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் 45 மற்றும் 2 மீட்டர் நீளமுள்ள டெட்னேட்டிங் கோட் ஆகியவை சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இராணுவ புலனாய்வுத் தகவல்களின்படி, நாகர்கோயில் பகுதியில் நடந்த சோதனையின் போது இவை ஒரு தற்காலிக குடிசையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.