இரண்டு போப்கள்’ ( The Two Popes)

உண்மை சம்பவங்களை பின்புலனாக எடுக்கப்பட்ட திரைப்படம் ‘இரண்டு போப்புகள்’ ( The Two Popes)எனச் சொல்லப்பட்டது.  சபை மேலுள்ள மக்கள் நம்பிக்கை, இரு மனிதர்களின் முரண்களையும் மீறிய நட்பு, சபைத் தலைமையின் அதிகாரம் இப்படியாக மூன்று அடுக்கு கதையை கொண்டது இத்திரைப்படம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

போப் பெனடிக்ட் ஜெர்மனியை சேர்ந்தவர், ஆழமான அறிவாற்றல் உள்ளவர், பேராசிரியர். பாரப்மபரிய கலாச்சார கருத்தக்களால் ஆளப்பட்டவர்.  அர்ஜென்றீனா கர்தினலான( பிஷப்பிற்கும் மேலுள்ள அதிகார நிலை) பிரான்ஸ்,   போப் பெனடிக்டை சந்திக்க வந்திருக்கிறார்.  அவர் ஒரு யேசு துறவியும் கூட.  அவர் போப்பை சந்திக்க வந்திருப்பதின் காரணம் தனக்கு கர்தினால் பதவி வேண்டாம், தன்னை ஒரு சாதாரண பாதிரியாராக பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்பதே.இருவரும் வெவ்வேறு கருத்தாக்கம் கொண்டோர் iருந்தாலும்  தங்களால் ஏற்று கொள்ள இயலாததையும்,  தங்களுடைய புரிந்துணர்வால் மதித்து புரிந்து கொள்கிறார்கள்.  இரு வித்தியாச ஆளுமைகளான கர்தினால் பிரான்ஸ் மற்றும்  போப் பெனடிக்டுக்கு இருவரும் தங்களுடைய கருத்தில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்..

 

அர்ஜென்டீனாவில் இருந்து வந்த கர்தினால் பிரான்சிசுக்கு கிறிஸ்தவ நெறிகள் அனுமதிக்காத ஓரினச்சேர்க்கை , பாதிரிகள் திருமணம் , கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில்   என தன் அனுபவம் சார்ந்த சுதந்திரமான பல கருத்துகள் வைத்துள்ளார், இத்துடன் கிறிஸ்தவத்தின் அடிப்படையான விவிலிய கருத்துக்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக  இருக்கிறார். இருவருடைய நீண்ட உரையாடல்கள், படமாக்கியிருக்கும் விதம், பார்ப்பவர்களை விரசப்படுத்தாது அறிவான தளத்திற்கு நகத்தியிருக்கிறது.
கர்தினலாக இருக்க விரும்பவில்லை என்றவரை, போப்பாக இருக்க கேட்டு கொள்வார் பழைய போப் பெனடிக்ட். கத்தோலிக்க கிறிஸ்தவம் வழக்கப்படி, நம்பிக்கைப்படி போப் என்பவர் பீட்டரின் மறுபதிப்பு. சபையின் அதிகாரம் என்பது உலகின் வல்லரசுகக்களையும் தாக்கம் கொடுப்பது . தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு,  அந்த அதிகாரம் தனக்கு வேண்டாம் பதவி துறக்கிறேன் ஒன்று முடிவெடுக்கிறார் போப் பெனடிக்ட்.
பொதுவாக சபையின் சட்டப்படி போப்பாக இருப்பாவர் தானாக  பதவி துறப்பது சாத்தியமானது அல்ல.   இருந்தாலும்  பதவியே துறக்க முடிவு எடுத்திருந்திருப்பார்.  இது போன்று உயிருடன் இருக்கையில் தன்னுடைய பதவியை துறந்த நிகழ்வு  700 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
அர்ஜன்றீனா கர்தினால் பிரான்சிஸ் பதவி ஏற்பதற்கு மிகவும் தயங்குவார்.  தன்னுடைய அரசியல் தன்னுடைய நிலைபாடு, அர்ஜன்றீனாவின் போராட்ட தளத்தில் தான் எடுத்த தந்திரமான முடிவுகள்,  இவைக்கும் மத்தியில் தனக்கு போப் ஆகும் தகுதி உண்டா என அச்சப்படுவார . பாவ மன்னிப்பு வழி இருவரும் தங்களின் மறுபக்கத்தை பற்றி நேர்மையாக விவாதித்துக் கொள்வது மிகவும் சுவாரசியம், மட்டுமால்ல ரசிக்க தகுந்ததாகவும் இருந்தது.             ” தகுதியற்ற இடத்தில் கடவுள் தன் தகுதியை அருளுவார்” எனக்கூறிய போப் பெனடிக்ட், கர்தினால் பிரான்சிஸுக்கு  போப்பாக பதவி பிரமாணம் செய்து வைப்பதுடன் கதை முடிகிறது.

 

அந்தோணி ஹோப்கின் மற்றும் ஜோனாத்தன் ப்ரைஸ் நடிப்பு அபாரம். இரு போப்பை பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது.  இயக்கியவர் பெர்னான்டோ ( Fernando Meirelles) காட்சி மொழியை அழகியலுடன் தந்திருப்பது அருமை.   திரைக்கதை அந்தோணி மாக்கார்டென் (Anthony McCarten) , “The Pope” என்ற புத்தகத்தில் இருந்து திரைக்கதைக்கான கருவை உருவாக்கியுள்ளார்.

வத்திக்கான் லீக்ஸ் , என சபையில் நடந்த எல்லா நல்ல, கெட்ட பக்கங்களையும் விவாதிப்பார்கள்.  இது போன்ற படங்களை ஏற்கும் மனப் பக்குவம் கத்தோலிக்க சபைக்கும் உள்ளது என்பதையும் பாராட்ட வேண்டும். பெண்கள்( பெண் துறவிகள்) வெறும் சமையல் காப்பி /தேத்தண்ணீர் பகிரும்  சேவகர்களாக உள்ளனர். ஆனால் அதிகாரக் கதிரையில் ஒரு பெண் கூட இல்லாது இருப்பது மிகவும் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால் திரைப்படத்திற்காக திணிக்கப்பட்ட பல பொய்மைகளும், பொய்களை அழுத்தி கூறி உண்மையாக மாற்றிய விதவும் அறிவோம்..
அந்த பிரதான பொய்மைகளை பார்ப்போம்.

1. போப் பெனடிக்ட் சிரிக்க மாட்டார்,தனியாகவே இருந்து உணவு அருந்துவார், ஒரு ஹக்( hug) கூட ஏற்க இயலாத அளவிற்கு பழமைவாதி.  தன்முகத்தன்மை ( introvert) கொண்டவர், லத்தீன் மொழியை மட்டுமே விரும்புகிறவர் , கோபக்காரர் நடனம் ஆட தெரியாதவர்.

 

உண்மையில் தூய பீட்டர் அரங்கில் தற்போதைய போப் பிரின்சிஸை விட அதிகம் மக்களை சந்தித்தவர் போப் பெனடிக்ட்.  பல மொழி விற்பன்னர், இசைக்கருவி மீட்டுவதில் வல்லுனர்.

அடுத்து தான் ரிசைன் செய்ய போவதை முன் கூட்டியை தெரிவித்திருந்தார் , பிரான்சிஸை போப் ஆக அழைத்தார் என்றதும் புனைவு.  2012 ல் பிரான்ஸிஸ் தன்னுடைய பணி குறைத்தல் நிமித்தமாக ரோம் வந்திருக்கவுமில்லை, போப்பை சந்தித்திக்கவும் இல்லை.
Change and comprising பற்றிய உரையாடல்கள்:
பிரான்சிஸ்: சுவருகள் உடைக்கப்பட வேண்டும்

போப் பெனடிக்ட் : சுவரில்லாது எப்படி வீடு உருவாகும்

பிரான்சிஸ்: தீமையின் சுவர்கள் பாலமாக மாற வேண்டும்…

 

இதில் பிரான்ஸிஸ் போப்பை நவநாகரீக மாற்றம் காண்பவராகவும், சுதந்திர மனிதனாகவும் , தெருவு கடையில் உணவருந்தி, சோசர் விளையாட்டு பார்த்து கொண்டு இருக்கும் நவீன மனிதனாகவும் , போப்பின் சிவப்பு ஷூவை புரக்கணிக்கும் புரட்சிவாதியாகவும் பிரகடனப்படுத்துகின்றனர்.  இப்படியாக இத்திரைப்படம் போப் பிரான்ஸிஸ் பக்கசார்பாக இருப்பதாக உள்ளது திரைப்படம்.

முக்கியமாக,  பிரான்ஸிஸ் போப்புக்கு இளம் பாதிரியாராக இருக்கையில் அமல்யா டெமோனி என்ற காதலி இருந்ததாக காட்டுவார்கள்.  அது போப்பின் 12 வது வயதில் உடன் படித்த அதே வயது பள்ளித் தோழி,  12 வயது பள்ளி பாலர் காதல் கதையை ஒரு பாதிரியின் காதலியாக காட்டியிருப்பது கத்தோலிக்க பாதிரியார்கள் மேற்கொள்ளும் பிரம்மச்சரியத்திற்கு( celibacy) மிகவும் எதிரானது.  இந்த பொய்மையை சேர்க்க தேவையே இல்லை.

 

அடுத்து 1200 வருடங்களுக்கு பின்பு கிடைத்த ஐரோப்பியர் அல்லாத போப், போன்றவைகள் எல்லாம் ஒரு வகை ‘சிவப்பாக இருக்கிறவன் பொய் பேச மாட்டான், கறுப்பானவன் ஏழை’ என்பது போன்ற வரட்டு பிரசார உக்தி.

Leave A Reply

Your email address will not be published.