வவுனியா வளாகத்தினருக்கு இன்று கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று (04) வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை வழங்கியதன் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளை வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.