இஸ்ரேலை 12 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவு.

இஸ்ரேலை 12 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

இஸ்ரேலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிப்பெற்றதையடுத்து பிரதமராக பதவியேற்றார். அதன்பின் அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்துவந்தது.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 120 இடங்களில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுயிட் கட்சி 30 இடங்களைப் பிடித்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும்,தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இந்நிலையில் நெதன்யாகுவை பதவியிலிருந்து இறக்க 8 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரு புதிய கூட்டணி அரசை உருவாக்கியுள்ளன. நப்தாலி பென்னட் என்பவர் தற்போது பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், சுழற்சி முறையில் பிரதமர் பதவி அனைத்து கட்சிகளுக்கும் கிடைக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.