தலைமன்னார் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்தார்

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கொரொனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இரண்டு பகுதிகளும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்கள் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது மன்னாரில் பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனையில் 80 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இவர்களோடு சேர்த்து இந்த மாதம் 252 பேரும் மன்னாரில் மொத்தமாக 759 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்

தலைமன்னார் பியர் பகுதியில் மொத்தமாக 62 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இதனால் தலைமன்னார் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

இதேவேளை இந்த பகுதியில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் கொழும்புக்கு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏனெனில்

இவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வைரஸ் மரபணு திரிபடைந்த வைரஸின் ஏதாவது ஒன்றின் மாதிரியா? மரபணு பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது இதன் முடிவு ஒரு வாரத்தில் எமக்கு கிடைக்க இருக்கின்றன

இதேவேளை முன்பு 100 பி.சி.ஆர் செய்தால் 4.5 பேருக்கு தொற்று ஏற்படும் காணப்பட்ட நிலமைகள் மாறி தற்போது ஆறு பேருக்கு தொற்று ஏற்படும் நிலை காணப்படுகின்றது

இது அபாயகரமான நிலமைகள் ஆகும் எனவே மக்கள் இதை உணர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் உரிய சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து எதிர்காலத்தில் கொரோனா தொற்றியிருந்தது பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

மேலும் மன்னார் மாவட்டத்தில் சமூக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது இதில் முதல் கட்டமாக மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 494 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது மிச்சம் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது

அத்துடன் மன்னாரில் இதுவரையில் கொரோனா தாக்கத்தினால் 5 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் இவர்களில் இருவர் புத்தாண்டு கொத்தணியின் பின் கொரோனா நிமோனியாவினால் மரணமடைந்தவர்கள் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி வினோதன் அவர்கள் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.