இலங்கையில் கடந்த 10 நாட்களில் 531 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 531 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய தொற்றுநோய் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்திய தினசரி கொரோனா மரணங்களின் அறிக்கைகளுக்கு அமைவாக இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கடந்த 10 நாட்களில் 229 பெண்களும், 302 ஆண்களும் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர்களில் 30 வயதுக்கு மேற்பட்ட 9 பேர் மரணமடைந்துள்ளனர். அதேவேளை, 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 103 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 419 பேரும் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி 71 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிசெய்யப்பட்டன.

இது நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் என்று தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.