சமூக ஊடகங்களில் புலிப் புகழ் பாடிய திருகோணமலை இளைஞர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மற்றும் அதன் தலைவர் பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று முன்தினம் (02) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி சாரதியான சந்தேகநபர், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாகவும், இது பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.