வெவ்வேறு இடங்களில் ஹெரோய்னுடன் 6 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஹெரோய்னுடன் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 57 கிராம் 08 மில்லிகிராம் ஹெரோய்னுடனும், 14 கிராம் 654 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மிஹிஜய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயண பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 6 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதார்னான தோட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீகொட சிறிமெதுர தோட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 5 கிராம் 530 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எகொட உயன பொலிஸ் பிரிவில் 5 கிராம் ஹெரோய்னைத் தன்வசம் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் 22 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.