ஐ.சி.சி. இருபது ஓவர் உலக கோப்பை அணிகள் அடங்கிய பட்டியல் வெளியீடு.

ஐ.சி.சி. இருபது ஓவர் உலக கோப்பை 2021 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. பி.சி.சி.ஐ. நடத்தவுள்ள இப்போட்டிகள் வருகிற அக்டோபர் 17ந்தேதி தொடங்கி நவம்பர் 14ந்தேதி வரை நடைபெறும்.

இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெறும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவை தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் ஏ-வில், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

குரூப் பி-யில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

குரூப் ஏ மற்றும் குரூப் பி அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இடம் பெறும்.

இதேபோன்று, குரூப் ஏ-வில் 2வது இடம் பெறும் அணி குரூப் 2விலும், குரூப் பி-யில் 2வது இடம் பெறும் அணி குரூப் 1லும் இடம் பெறும்

Leave A Reply

Your email address will not be published.