பதியுதீன் வீட்டில் இறந்தவர் சிறுமி அல்ல , அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருந்தாலும் அவர் இறந்துவிட்டதால் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை : குணரத்ன வன்னிநாயக்க (Video)

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இறந்த சிறுமிக்கு 15 வயது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அவர் சிறுமி அல்ல, அவர் 16 வயது யுவதி என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மரணத் தருவாயில் தனது உடலுக்கு தானே தீ வைத்துக் கொண்டதாக மருத்துவரிடம் அந்த யுவதி தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இறந்தவரின் மரணத்திற்கு அவருடைய வாக்குமூலம் ஆதாரமாகிறது என்றும் மேலும் விசாரணைக்கான சாத்தியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடந்துள்ள சம்பவத்தின் தன்மையின்படி, அந்த மரணம் ஒரு தற்கொலை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிருந்தாலோ கூட, அவர் இறந்துவிட்டதால் எந்தவொரு சட்டத்தையும் அமல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.