தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு -29 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,65,325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,73,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,839 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில், 25,18,777 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,289 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வீட்டுத்தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 20,286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 194 பேருக்கும், கோயம்புத்தூரில் 223 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.