இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை…

கொவிட் தொற்று காரணமாக கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

மத்திய வங்கி கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக கைத்தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

உலோகம் சார்ந்த கைத்தொழில் துறை உட்பட மேலும் பல கைத்தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வது தொடர்பான இறக்குமதி தடைகளை நீக்குவதற்கு மீள் ஆய்வு செய்வதாகவும் அங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் (2001.06.11) முதல் இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அத்தியாவசிய மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வது தொடர்பான கடன் சான்று ஆவணங்களை விடுவிப்பது சம்பந்தமான சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்தார்.

வாகனங்களை பொருத்தும் கைத்தொழில் துறைக்கு தேவையான பிரதான பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார். இதன்போது இந்ததடைகள் விரைவில் நீக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தொழில் அமைச்சின் செயலாளர் தயா ரத்நாயக்கஇ அமைச்சர் அனுஷ குணசிங்கஇ மேலதிக செயலாளர் எஸ். எல். நசீர்இ ரஞ்சித் விமலசூரியஇ இலங்கை தொழில் அபிவிருத்தி சபை தலைவர் உபசேன திசாநாயக்கஇ மத்திய வங்கியின் பிரதித் தலைவர்கள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் எள்ளிட் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.