பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில் சிக்கல் நிலமை எதுவும் கிடையாது.

வடக்கில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில் சிக்கல் நிலமை எதுவும் கிடையாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் எமது குழுமத்துக்குத் தெரிவித்தார்.

தற்போதும் வடக்கு ஆசிரியர்கள் ஆசிரியர்கள் போதுமான ஒத்துளைப்பை வழங்கி வருகின்றனர். பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போதும் இந்தநிலமை தொடரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் 200 மாணவர்களைக் கொண்ட இடைநிலைப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் தரம் 11 மற்றும் 12 வகுப்புகளும் ஆரம்பிக்கப்படுவதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களின் விடுமுறைகள் அவர்களின் சொந்த விடுமுறைகளாக கணிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வேளை கையொப்பபதிவு புத்தகத்தில் விடுமுறை பதியப்பட்டாலும்,

அது விடுமுறையாக கணக்கில் எடுக்க முடியாது.

ஏன் எனில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனுமதிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எழுத்து மூலமாக கல்வி அமைச்சுக்கு போராட்டத்தை அறிவித்துள்ளது.

திணைக்கள அதிகாரி லீவு விண்ணப்பம் கேட்பாராக இருப்பின்,
அதனை கொடுக்க தேவை இல்லை.

மீறி கேட்டால், கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்ட எழுத்துமூல ஆவணப்பிரதி தொழிற்சங்கம் மூலம் தரப்படும்.

அதனை ஆவணமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் லீவு பிரச்சினைக்கு மேலதிக நடவடிக்கை எடுக்கவோ லீவுக்கான ஆவணங்களோ வழங்கவேண்டிய நிலை இல்லாமல் போகும்.

Leave A Reply

Your email address will not be published.