நான்கு பழங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழ வகைகளை விற்பனை செய்யும் பழக்கடைகளில், தற்போது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனையாகும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழ வகைகளில் மனித உடம்புக்குப் பொறுத்தமற்ற நச்சுத் தன்மை மற்றும் இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய மூலப் பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமையவே, இச்சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

விசேடமாக, கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள பழக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பப்பாசி, அன்னாசி, வாழை மற்றும் உள்ளூர் திராட்சை ஆகிய பழ வகைகளிலேயே, இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த பழ வகைகளின் மாதிரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இவ்வாறான பழங்கள் தொடர்பில் கம்பஹா மாவட்ட மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும், குறித்த பழ வகைகளில் ஏதாவது வித்தியாசம் தென்பட்டால், அருகிலுள்ள சுகாதாரப் பணிமனைக்கு உடனடியாக அறிவிக்குமாறும், கம்பஹா மாவட்ட உணவு மற்றும் ஒளடதங்கள் தொடர்பிலான பரிசோதகர்கள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.