தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகள்!

தென் ஆபிரிக்க கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது, தற்போது 10ற்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், போட்சுவானா, ஜேர்மனி, ஹெங்கொங், இஸ்ரேல், இத்தாலி, செக்குடியரசு, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

பெல்ஜியம், இத்தாலி, செக்குடியரசு உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் விகிதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் 13 விமான பயணிகள், ஒமிக்ரோன் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா, ஜேர்மனி அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தலா இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும், அனைத்து தொற்றாளர்களும் தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த தொற்றாளர்களுடன் விமானத்தில் பயணித்த பயணிகளும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் மீண்டும் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.