எந்தெந்த மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு?

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 91 நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரத்தில் 32 பேரும், அதனைத் தொடர்ந்து தில்லியில் 22 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகத்தில் 8 பேரும், தெலங்கானாவில் 8 பேரும் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குஜராத்தில் 5 பேரும், கேரளத்தில் 5 பேரும், ஆந்திரம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் முறையே தலா ஒருவரும் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.