அக்குறணை பிரதேச சபை கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு.

பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதை விட பல்லின மக்களிடையே தேசிய நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வுவினை ஏற்படுத்துவதில் நூற்றுக் தொன்னூறு விகிதமான வேலைத் திட்டங்களையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.

அக்குறணை மீசானியா அரபுக் கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு அரபுக் கல்லூரியின் பிரதான நிர்வாக இயக்குனர் இஹ்திசாம் மீசான் முகைதீன் வழிகாட்டலுடன் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ. கலிலுர்ரஹ்மான் (நுலாரி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டோ கொப்பி இயந்திரத்தை கையளித்து உரையாற்றிய அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்

நாங்கள் பாடசாலைக்கு செல்லும் போது ஒரு காலத்தில் சிங்கள சகோதரர்களுடன் மிக நெருக்கமான உறவு இருந்தது. அது இன்று உண்மையிலேயே இல்லாமற் போய் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும். நாம் கல்வி கற்கும் போது சிங்கள மொழி தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. விசேடமாக முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உள்ள ஒரு பிரச்சினைதான் அரச அலுவகங்களுக்கு செல்லப்பயம். பொஸிஸ் நிலையத்திற்குச் செல்ல பயம். ஏனென்றால் அவர்களுக்கு சிங்கள மொழி தெரியாது. இது ஒரு பெரிய குறைபாடாகும்.

இலங்கைக்குள் 70 விகிதமான மக்கள் பேசுவது சிங்கள மொழியே. அதன் காரணமாக கட்டாயமாக நாம் எல்லோரும் சிங்கள மொழியினைக் கற்க வேண்டும். இலங்கையில் பிறந்த எங்களுக்கு எப்படி தமிழ் மொழி தாய் மொழியானது என்று தெரியாது. குறிப்பாக மலையகத்திலுள்ள முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையிலும் எங்கள் எல்லோருக்கும் சிங்கள வாசகம் இருக்கிறது. எப்படி முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டார்கள் என்ற கேள்வி எனக்கு இருக்கிறது.

சிங்கள மொழி அறிவு எல்லோரும் கற்றுக் கொள்வார்களாயின் இந்நாட்டில் நிலவும் நிறைய பிரச்சினைகளுக்கும் மற்றும் எமது சமூகத்தினர் முகம்கொடுத்துள்ள நிறையப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். சிங்கள மொழியினை எல்லோரும் சரளமாக பேச முடியும் என்றால் எமது இந்தப் பிரச்சினைகளில் நூற்றுக்கு 90 விகிதம் விடுபட முடியும்.நான் முதலில் என்னுடைய சம்பளத்தை முஸ்லிம் உலமாக்களுக்கு சிங்கள கல்வியினைக் கற்றுக் கொள்வதற்கான செலவினை செய்து வருகின்றேன். கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் சரியான முறையில் செய்து வந்தோம். பின்னர் கொரோனா தொற்றினால் இடையூறுகள் ஏற்பட்டன. தற்போது இரு வாரங்களில் இருந்து அந்த சிங்கள மொழிக் கற்கை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது அக்குறணை மட்டும் வரையறை செய்யவில்லை. கண்டி மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் சிங்கள மொழியினையோ தமிழ்யினையோ நடத்துவதற்கு நாங்கள் நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம்.

சம காலத்தில் இக் கல்லூரி இந்நாட்டுக் முன் மாதரிமிக்க தன்மைகளைக் கொண்டுள்ளன. தமிழ் மொழியைத் தவிர்த்து முழுமையாக சிங்கள மொழி மூலம் சகல நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு வரவேற்கத் தக்க அம்சமாகும். இக்கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மீசானிய அரபுக் கல்லூரி எங்களுடைய அக்குறணைக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் சொத்தாகும். அரபு கல்வியினை மேம்படுத்துவது எல்லோருடைய பொறுப்பும் ஆகும். இக்கல்லூரிக்கு போட்டோக் கொப்பி இயந்திரம் ஒன்றை கையளிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இக்கல்லூரிக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் இஹ்திஸாம் மீசான் ஹாஜியாருக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வது பெரிய காரியமல்ல. அவருக்கு அது மிக சிறிய காரியம். இந்த இடத்தில் ஒரு கோரிக்கை கிடைத்தவுடன் இந்த இடத்தில் இவ்வுதவியை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என்பது ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் கல்வி நிர்வாகப் பொறுப்பதிகாரி முன்னா ஓய்வு பெற்ற அதிபர் உவைஸ் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனக் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.