சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் வடமராட்சி கிழக்கில் உதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அதற்கமைய வெண்ணிலா விளையாட்டுக்கழகத்தின் புனரமைப்புக்காக ஒரு இலட்சம் ரூபாவும், வெற்றிலைக்கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டுக்கழகம், ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம், உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம், நாகர்கோவில் நாகதீபம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபா வீதமும் நிதி ஒதுக்கப்பட்டே குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார். அத்துடன் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், சி.பிரசாத், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர்கள், அதிகாரிகள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.