அமைச்சரவையிலிருந்து விமல், வாசு, கம்மன்பிலவை நீக்கமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களைப் பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக அதிலிருந்து விலகி கருத்து வெளியிடுவதே சிறந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் கூட்டுப் பொறுப்பை மீறியமை தொடர்பில் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம். பிரேமசந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்னாண்டோ வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.