அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்களை பார்வையிடுவதற்காக இன்று (10) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

உயர்ஸ்தானிகர் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிருத்தி விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்ததுடன் புராதன சுற்றுலாத் தளமாகிய டச்சுக் கோட்டையினையும் பார்வையிட்டார்.

டச்சுக் கோட்டையின் 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் பொது நூலகத்தின் மேல் தளத்தில் இலத்திரனியல் வாசிகசாலை ஒன்றை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அரசாங்க அதிபர் உயரிஸ்தானிகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.