அத்தியாவசியமான இடங்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை…..

அத்தியாவசியமான இடங்களுக்கு துண்டிப்புகள் இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகப்பதற்குரிய நடவடிக்கை பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் இடங்களுக்காக தொடர்ச்சியாக செயற்படும் நடவடிக்கை பிரிவொன்றை, மின்சக்தி அமைச்சின் கீழ் செயற்படுத்த வேண்டும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டதாக, மின்சக்தி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டாலும், 24 மணித்தியாலங்களும் செயற்படும் வைத்தியசாலைகள் , பாதுகாப்பு இடங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினால், விசேட நடவடிக்கை பிரிவை முன்கொண்டு செல்ல வேண்டும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன அமைச்சு, சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.