மஹிந்தவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்துத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 9.30 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் மஹிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா, கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.