அமெரிக்காவில் போராட்டம் நடாத்துவோர் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மின்னாபொலிஸ், மின்னிசோட்டா பகுதியில் காவல்துறையினரின் மிலேச்சத்தனத்திற்கும், இனவெறிக்கும் எதிராக மக்கள் பாரியளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொவிட்-19 நுண்மித் தொற்றினால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்கும் போர்வையில் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்துபடுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் போர்வையில் அரசாங்கம் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொடர்பாடல் ட்ரேஸிங் எனப்படும் முறையானது மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழுக்களை ஓரங்கட்டும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்டாக் ட்ரேஸிங் செயலிகள் அனைவரினதும் செல்லிடப்பேசிகளிலும் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் 52 வீதமானவர்களே இணையத்தை பயன்படுத்தி வருவதாகவும் ஆபிரிக்காவின் ஒர் பகுதியில் இந்த எண்ணிக்கை 23 வீதமாகவும் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்டாக் ட்ரேஸிங் செயலியைக் கொண்டமைந்த முறையைக் கொண்டு கொவிட் தொற்றாளர்களை இனம் காண்பது நடைமுறைச்சாத்தியமற்றது எனவும் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட செல்லிடப்பேசிகளை அனைத்து நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Comments are closed.