22 யூடியூப் சேனல்களுக்குத் தடை

தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலி செய்திகளை பரப்பியதாக 4 பாகிஸ்தான் சேனல் உள்பட 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகள்- 2021கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமலுக்கு வந்த பின்னா், இந்திய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதுதொடா்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘22 யூடியூப் சேனல்கள், 3 ட்விட்டா் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு, ஒரு செய்தி வலைதளம் ஆகியவற்றின் மீது தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட யூடியூப் சேனல் வரிசையில் இந்தியாவிலிருந்து 18 சேனல்களும், பாகிஸ்தானை சோ்ந்த 4 சேனல்களும் அடங்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பா் முதல் இதுவரை தேசப் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்ததாக 78 யூடியூப் சாா்ந்த செய்தி சேனல்கள், பல்வேறு சமூக வலைதள கணக்குகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக 260 கோடிக்கும் அதிகமான பாா்வையாளா்களைக் கொண்டுள்ளதாகவும், இந்திய ஆயுதப் படைகள், ஜம்மு- காஷ்மீா், உக்ரைன் விவகாரங்கள் குறித்து போலி செய்திகளை பரப்புவதையே அவை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.