கண்டி அமைச்சரின் அறிவுறுத்தலில் , துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன உத்தரவிட்டுள்ளார் (வீடியோ)

நேற்று (19) ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு காவல்துறையினரால் SSP கீர்த்திரத்னவுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கண்டி மாவட்டத்தின் புதிய போக்குவரத்து அமைச்சரினால் அவருக்கு துப்பாக்கி சூடு நடத்த அறிவுறுத்தப்பட்டதாகவும், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கீர்த்தி ரத்ன மேலதிக காவல் துணைக் கண்காணிப்பாளரராக சேவையில் இணைந்துள்ளதாகவும், அவர் பிரதமரின் நெருங்கிய மெய்ப்பாதுகாவலரான மேஜர் நெவில்லின் நெருங்கிய உறவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பவுசரை தீவைக்க வந்தவரென இறந்தவரை ஒரு குறுக்கு சாலையில் வைத்து சுட்டுள்ளனர், கொலையை வீடியோ எடுத்த நபரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளனர். அவரது மொபைல் போன் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர் ரம்புக்கனை நாரம்பெத்த பகுதியைச் சேர்ந்த சமிந்த லக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக் கொலைக்கு நீதி தேவை என பெரும் திரளான வழக்கறிஞர்கள் கேகாலை நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.