மும்பை – சென்னை அணிகள் இன்று மோதல்…

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டுவது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்ததே எனலாம். சென்னை அணி எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்து ரன்-ரேட்டிலும் உயரிய நிலையில் இருந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

மும்பை அணியை பொறுத்தமட்டில் இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையான திறனை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருவதை அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். தங்களுடைய தவறுகளை சரிசெய்து எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் ஏற்றம் காண அந்த அணி முயற்சிக்கும்.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மும்பை அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர சென்னை அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

Leave A Reply

Your email address will not be published.