அண்ணாச்சி படத்துக்கு இவ்வளவு போட்டியா.?

சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கூடியவிரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.

மேலும் படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் தற்போது தி லெஜன்ட் படத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

இப்படம் அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது மதுரை அன்புச்செழியனும், ஏஜிஎஸ் நிறுவனமும் இப்படத்தை வாங்க முன் வந்துள்ளனர். ஏனென்றால் இப்படத்தில் ஏகப்பட்ட பிரம்மாண்ட காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் அண்ணாச்சி. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் இருந்தது. இதனால் அண்ணாச்சி அடுத்தடுத்து மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.