ராஜபக்சக்களால் சீரழிந்த எமது நாட்டை 5 வருடங்களுக்குள் கட்டியெழுப்புவோம் – சஜித் திடசங்கற்பம்.

“ராஜபக்சக்களால் சீரழிக்கப்பட்ட எமது நாட்டை உண்மையான மக்கள் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன இன்னும் ஐந்து வருடங்களுக்குள் நிச்சயமாகக் கட்டியெழுப்பும்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புவக்பிட்டிய பென்ட்ரிக் தோட்ட மக்களுக்கான குடிதண்ணீர் கட்டமைப்பைக் கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு மக்கள் அபிப்பிராயத்தை அப்பட்டமாக மீறி, அதைக் கிடப்பில் போட்டது. மக்களுக்குத் துரோகம் செய்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

தோல்வியடைந்த அரசு இன்று ஆடைகளை மாற்றிய வண்ணம், ஒவ்வொரு நபர்களை மாற்றி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயன்றாலும், இதிலிருந்து இந்நாட்டின் அழிவுப் பாதை நிற்காது.

புதிய மக்கள் அபிப்பிராயத்தின் மூலம் இந்நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். நிலையற்ற தன்மைகளால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.