சிறிலங்காவின் பதில் ஜனாதிபதியாக இன்று காலை பதவியேற்கிறார் ரணில்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க
இன்று (15ஆம் திகதி) காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பானது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.