கோட்டா கோ கம முதல் சமூகவலைத்தள போராளி பெத்தும் கர்னர் கைது (Video)

போராட்டத்தில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த பெத்தும் கர்னர் இன்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

இவர் இராணுவ பிரிவில் இருந்த வைத்திய லுத்தினன்  அதிகாரியாவார். அவர்  போர் காலத்தில் அனுராதபுர வைத்தியசாலையில்  பணியாற்றிய மற்றும் போர்களத்து அனுபவங்களை ஒரு நூலாகவும் வௌியிட்டுள்ளார். அதில் இராணுவத்தை போல , எதிர் தரப்புக்கும் ஒரு வைத்தியராக பேதங்கள் பாராது சிகிச்சை அளித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.  தவிர கோட்டா கோ கம சமூக வலைத்தள பரப்புரையை முதன் முதலாக இவரே ஆரம்பித்தார். இது பலர் அறியாத விடயம். இவர் இராணுவ மருத்துவ துறையிலிருந்து விலகி குருநாகல் வைத்தியசாலையில் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார். அதன்பின் சிங்கப்பூர் வைத்தியசாலையிலும்  பணியாற்றியுள்ளார். அதன் பின்னரே அவர் மக்களை அரசியல் மயப்படுத்தி மாற்றம் ஒன்றை கொண்டுவர முயல்கிறார்.

2000மாவது ஆண்டு தேர்தலில் போட்டியிடும் பெத்தும் கர்னருக்கு 5780 வாக்குகள் கிடைக்கின்றன.  அதன்பின் நாடு முழுவதும் வீதி ஆர்ப்பாட்டங்களை தொடங்குகிறார்.

அவரை கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சுகயீனமுற்றிருப்பதாக சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் தங்கியிருந்து பல்வேறு வழிகளில் மக்களை அந்த இடத்திற்கு வருமாறு தெரிவித்தும், பாராளுமன்ற பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வீதித் தடைகளை உடைக்கும் பணியில் மக்களை வழிநடத்திச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினரில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களைத் தாக்கிய தீவிரவாதிகள், அவர்களது T-56 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய மெகசீன்களை எடுத்துச் சென்றனர். இந்த துப்பாக்கி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

மீகவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படும் பெத்தும் கெர்னருக்கு எதிராக நீதிமன்றில் இருந்து பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்று சரணடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் நேரலையில் இணைக்கப்பட்ட பெத்தும் கர்னரின் காணொளி கீழே உள்ளது.

பெத்தும் கர்னர் குறித்து அவரே பேசுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.