நீதியை நிலைநாட்ட வேண்டும்! – தினேஷுடனான சந்திப்பில் ஜூலி வலியுறுத்து.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இரண்டாவது தடவையாக நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்த அவர், இன்று புதிய பிரதமரையும் சந்தித்தார்.

இந்தச் சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து புதிய பிரதமருடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் இந்தச் சந்திப்பு குறித்து ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும்போது, நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் என்று அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அவர் கூறியுள்

Leave A Reply

Your email address will not be published.