கேரளாவில் மீண்டும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்… ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கேரள மாநிலம் வயநாடு பகுதயின் பத்தேரி நென்மேனி சீரல் பூலக்குண்டில் உள்ள தனியார் பண்ணையில் மீண்டும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ராப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளன.

கடந்த வாரம் நென்மேனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரல் பூலக்குண்டில் உள்ள பன்றி பண்ணையில் மூன்று பன்றிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்த பன்றிகள் உட்பட 10 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அப்போது இரண்டு பன்றிகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பண்ணையில் 200 பன்றிகள் உள்ளன.

நோய்த் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அங்கே விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பண்ணையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் ஒரு சிறிய பண்ணையும் உள்ளது. முன்னதாக, மானந்தவாடி பேரூராட்சி 33வது வார்டு மற்றும் தவிஞ்சல் கிராம பஞ்சாயத்து வார்டு 15ல் உள்ள பன்றி பண்ணையிலும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தப் பண்ணையில் இருந்த பன்றிகள் மொத்தமாக கொன்று அழித்தனர். மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் வனத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்பு பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயின் மையப்பகுதியில் இருந்து ஒரு கிரு கிலோ மீட்டர் சுற்றளவானது பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.