இலங்கை வரும் கோட்டாவுக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்குக! – ஜனாதிபதியிடம் ‘மொட்டு’க் கட்சி நேரில் கோரிக்கை.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.

சர்வகட்சி அரசு உட்பட அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பஸில் ராஜபக்ச, சாகர காரியவசம் உட்பட ‘மொட்டு’க் கட்சியின் பிரமுகர்கள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    நாட்டைக் கொள்ளை அடித்துப் போனவனுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் சொத்துகள் அவ்வளவையும் அரச சொத்தாக அறிவிக்கவேண்டும் இது தான் நியதி சட்டம்

Leave A Reply

Your email address will not be published.