துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளும் அரசுப்பள்ளி மாணவி… ஆரணியில் பரபரப்பு
ஆரணி அருகே அரசு பள்ளியில் சீருடை அணிந்து துடைப்பத்துடன் குப்பைகளைஅள்ளும் சிறுமி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையில் சுமார் 249 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் தலைமையாசிரியர் அன்பழகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் இந்த நடுநிலைப் பள்ளிக்கு ஊராட்சி மன்ற சார்பில் தூய்மைபணியாளர்கள், பணியமர்த்தம் செய்து பணியை செய்து வந்தனர்.
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களை ஊராட்சி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் இன்று நடுநிலைப்பள்ளியை சேர்ந்த சீருடை அணிந்த ஓரு சிறுமி துடைப்பம் மூலம் பெருக்கி குப்பைகளை அள்ளியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாக சமூக வளைதலங்களில் பரவி வருகின்றது. பள்ளி மாணவ மாணவிகளை தூய்மை பணிக்கு ஈடுபடுத்த கூடாது என்று நிர்வாகங்களின் மீது பள்ளி கல்வி துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இருப்பினும் அம்மாபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், சீருடை அணிந்து சிறுமி ஓருவர் தூய்மை பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.