சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு சர்வதேச தடை!

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவ உறுப்பினர்கள் மீது தடைகளை விதிக்கும் சாத்தியக்கூறுகளை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பாராளுமன்ற சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் (FCDO) பொறுப்பு அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன் இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட நிலைமைகளை பிரித்தானிய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தடைகள் உள்ளிட்ட இராஜதந்திரக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் நோர்மன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெத் வின்டர் எழுப்பிய கேள்விக்கு கன்சர்வேடிவ் அமைச்சர் நார்மன் இவ்வாறு பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.