கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கண்கள் பெரிதாக இருப்பவர்களைப் பார்த்தால் “முட்டைக் கண்” என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த முட்டைக் கண்களுக்கே டப் கொடுக்கும் வகையில், உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா. இவர் தனது கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கண்களை உருட்டி அவர் பார்க்கும்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும். தனக்கு உள்ள இந்த வித்தியாசமான திறமையானது, தன் தந்தை, தாய் மற்றும் தன்னை படைத்த இறைவன் தந்த பரிசு என்கிறார் சிட்னி. மேலும், கண் விழிகளை வெளியில் தள்ளிவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்போது, சில நொடிகள் பார்வையை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார். எனினும் ஆபத்தான இந்த சாதனைக்காக அவர் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.