எப்படி இருக்கிறது ‘லவ் டுடே’ முழு விமர்சனம்.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் லவ் டுடே படம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல காதலிக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.

அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் மாற்றிக் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக காதல் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அதனால் இந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் இளைஞர்கள் பார்த்து வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது. இன்றைய கால கதையை கேவலப்படுத்தும் தலைமுறைக்கு புத்தி புகட்டும் விதமாக இந்த படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. -விளம்பரம்- காதல் என்பது என்ன என்பதை அழகாக இயக்குனர் படத்தில் காண்பித்து இருக்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ் கால காதல் தான் உண்மை காதல் என்று மாறு தட்டி சொல்லும் அளவுக்கு இந்த படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இன்றைய தலைமுறைகளையும் யோசிக்க வைத்திருக்கிறது என்பதை சொல்லலாம்.

மேலும், படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்டு 2 மணி நேரம் 34நிமிடங்கள் படம் ஓடி இருக்கிறது. முதல் பாதியில் ஒரு மணி நேரம் 24 நிமிட ஒரு இடைவெளிக்கு பின் ஒரு மணி நேரம் 10 நிமிடமும் ஓடி இருக்கிறது. படம் வெளியாகி முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் சிலர், சிரிச்சு சிரித்து வயிறு வலிக்கிறது, இன்றைய கால இளைஞர்களுக்கு தேவையான படம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இனி வரும் காலங்களிலும் படம் வசூல் ரீதியாக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இன்றைய கால காதல் கதையை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். நகைச்சுவை சிறப்பு. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தவிர மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. காதல் கதை என்பதால் இன்றைய இளைஞர்கள் ஆர்வத்துடன் கதை வருகிறார்கள். மொத்தத்தில் லவ் டுடே – நீண்ட நாள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.