மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி இருவர் பரிதாபப் பலி!

வாகன விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.