யாழில் மின்னல் தாக்கி ஆண் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இன்று மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மழை பெய்தமையால், மழைக்கு ஒதுங்கி நின்றபோதே மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.