521,118 பேரை காவு வாங்கிய கொரோனா

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஸ்பைன் மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (02) இரவு 10 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 10,905,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 521,118 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,086,319 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 4,297,691 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 58,043 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

  • அமெரிக்கா > 131,026
  • பிரேஷில் > 61,314
  • பிரித்தானியா > 43,906
  • இத்தாலி > 34,818
  • பிரான்ஸ் > 29,861
  • மெக்சிகோ > 28,510
  • ஸ்பெயின் > 28,363
  • இந்தியா > 18,089
  • ஈரான் > 11,106

என காணப்படுகின்றன.

Comments are closed.