எருமை மாட்டுக்கு புடவை கட்டிவிட்ட மாதிரி இருக்கு.! விமர்சித்த ஜனனி (Video)

ரட்சிதாவின் புடவை கட்டி இருப்பதை பார்த்து எருமை மாட்டிற்கு புடவை கட்டியது போல் இருக்கிறது என்று பேசிய ஜனனிக்கு எதிராக பலர் கருத்து தெரவித்து வந்த நிலையில், ரட்சிதாவின் கணவரே அது குறித்து தற்போது instagram-மில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

பிரிந்து வாழ்ந்து வரும் போதும், ரட்சிதாவிற்காக பல நல்ல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் அவரது கணவர் தினேஷ். அந்த வகையில் தற்போது ரட்சிதாவிற்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர்தான் ரட்சிதா. இவரும் இவரது கணவர் தினேஷும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வருகின்றனர். மேலும் ரட்சிதாவிற்கு சரியான சீரியல்கள் அமையாத காரணத்தினால் அவர் பிக்பாஸ்ஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளே சென்று இருக்கிறார்.

உள்ளே சென்ற நாள் முதல் அவருடன் காதல் இருப்பது போல ராபர்ட் மாஸ்டர் சில நாடகத்தை அரங்கேற்றி வந்தார். இதனால் ராபர்ட் மாஸ்டர் வெளியேற வேண்டும் என்றும், அவரைத் தூண்டிவிடும் மைனாவும் வெளியேற வேண்டும் என்றும் தினேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

தொடர்ந்து ரட்சிதாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் அவர், ரட்சிதா நாமினேஷனில் இருக்கும் போது அவருக்கு வாக்களிக்கும் படியும் பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஜனனி பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். சமீபத்தில் ரட்சிதா சேலை கட்டிக்கொண்டு வரும்போது அதை பார்த்த மைனா, சேலை என்றால் அது உனக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கிறது என்று ரட்சிதாவை புகழ்ந்து பேசி இருப்பார்.

அப்போது அதை கவனித்த ஜனனி, தனலட்சுமியிடம் தனியாக சென்று ரட்சிதா குறித்த சில விரும்பத்தகாத கருத்துக்களை கூறுவார்.

அதில் ரட்சிதாவிற்கு சேலை நன்றாகவா இருக்கிறது? மைனா சொல்கிறார், ரட்சிதாவிற்கு மட்டும்தான் சேலை நன்றாக இருக்கிறது என்று. ஆனால் அதை பார்த்தால் எருமை மாட்டிற்கு புடவை கட்டி விட்டது போல் இருக்கிறது என்று ரட்சிதா பற்றி தனலட்சமியிடம் கீழ்த்தரமாக பேசி இருந்தார் ஜனனி.

இதை பார்த்த பலரும் ஜனனியை திட்டி தீர்த்து வந்தனர். கத்திரிக்காய் சைஸில் இருந்து கொண்டு இவர் என்ன வாய் பேசுகிறார்? விஷபாட்டில் ஜனனி, என்றெல்லாம் ஜனனியை வசைப்பாடி வந்தனர். இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் உங்களுக்கு பின்னால் பேசுபவர்கள், நம்பிக்கை இல்லாத நண்பர்கள் மற்றும் துரோகிகளை கடந்து விடுங்கள். உங்கள் விளையாட்டை மற்ற போட்டியாளர்கள் போல் விளையாடுங்கள். அதை பார்க்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.

வோட் ஃபார் ரட்சிதா, ஐ ஸ்டான்ட் வித் ரட்சிதா எந்த ஹேஸ் டேக்கையும் பதிவிட்டு மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீர்கள் என்ற ரீதியில் அவர்களின் புகைப்படங்களை x மார்க் செய்து அழித்து அந்த புகைப்படத்தை தனது instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார் தினேஷ்.

Leave A Reply

Your email address will not be published.