பெற்றோர் முன்னிலையில் சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அமிடாலா கிராமத்தை சேர்ந்த இளைஞர் எட்டாம் வகுப்பு படிக்கும் தன்னுடைய உறவு முறை சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்ய இரண்டு வீட்டாரும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அந்த சிறுமியை வீட்டு வாசலில் நிறுத்தி திருமணத்திற்கான ஏற்பாடுகள் எதையுமே செய்யாமல் அந்த வாலிபர் தாலி கட்டினார்.

விளையாட்டு திருமணம் போல் பெரியோர்கள் முன்னின்று நடத்திய இந்த திருமணம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனைக் கண்டு உடடியாக அங்கு சென்ற சமூக ஆர்வலர்கள் குழந்தை திருமணம் பற்றி உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த உரவகொண்டா போலீசார் தாலி கட்டிய வாலிபர், அவர்களுடைய உறவினர்கள் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர். இந்த திருமணத்தை நடத்த தாலி கயிறு வாங்க மூன்று ரூபாய், மஞ்சள் கிழங்கு வாங்க இரண்டு ரூபாய் என்று மொத்தம் ஐந்து ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.