மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மீட்பு!

பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘பூறு மூனா’ என அழைக்கப்படும் ரவிந்து வர்ண ரங்கனவைத் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தியபோது, குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹன்வெல்ல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 662 கிராம் அளவுடைய ‘சி 4’ என்ற வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் குறித்த சந்தேகநபரால் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படும் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதற்கு அருகிலுள்ள ஓர் இடத்திலிருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.