போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவருக்கு 1 மில்லியன் இழப்பீடு: சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்.

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அலவ்வ பிரதேசத்தில் உயிரிழந்த சாரதியின் வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத் தொகையை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி பிற்பகல் நாரம்மல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​நாரம்மல நகருக்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு, அந்த உத்தரவை மீறி வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லொரியை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று தம்பலஸ்ஸ சந்திக்கு அருகில் நிறுத்தி துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தி சோதனையிட முயன்ற போது , ​​சப்-இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் லொரி டிரைவரது தலையில் பட்டு, சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.துப்பாக்கிச் சூட்டு குண்டு வலது காது பகுதி வழியாக துளைத்துக் கொண்டு இடது காது வழியாக வெளி வந்துள்ளமை மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் , சம்பவ நேரத்தில் பணியில் இல்லாததுடன் , பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸ் வாகனம் அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மஹரச்சியமுல்ல பிரதேசத்தில் வாழும் தச்சுத் தொழிலாளியான 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ரொஷான் குமாரதிலக்க என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை நாரம்மலை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் :
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு , 12 வருட கடூழிய சிறை!

அணிசேரா அமைப்பின் மாநாட்டில் பாலஸ்தீன விடுதலைக்காகக் குரல் கொடுத்த ரணில்!

மலையகத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்தியத் தூதுவர்!

பன்னங்கண்டி பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

மொட்டு கட்சி, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை துரத்திய மக்கள்.

புதிய பொலிஸ் வழிகாட்டுதல்கள்: சாதாரண உடையில் கடமைகளைச் செய்யும்போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்த முடியாது – காவல்துறை.

தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு அரச தலைவர்களுடன் ரணில் சந்திப்பு.

பிணத்தை வைத்து பிழைப்பு நடத்திய மாநகர சபைப் பணியாளர் மாட்டினார் – ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியல்.

Leave A Reply

Your email address will not be published.