இந்திய நடிகைகளோடு ஹட்டனில் கோலாகலமாக தைப்பொங்கல் விழா (Photos)

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகள்  , ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யா தத்தா பங்குபற்றுதலுடன் தேசிய தைப்பொங்கல் தின விழா (21) ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிராந்திய சபை ஆகியன இணைந்து தேசிய தைப் பொங்கல் தின விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இந்த தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றது.

ஹட்டன் நகர மையத்தில் இருந்து தேசிய தைப் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அதிதிகளை தோட்ட மக்கள் வரவேற்று ஹட்டன் டன்பார் விளையாட்டரங்கிற்கு அழைத்தனர்.

தேசிய தைப்பொங்கல் விழா, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று காலை 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகியது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, கிழக்கு மாகாண பதில் ஆளுநர் செந்தில் தொண்டமான், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தை பொங்கல் விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் , ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


மேலதிக இன்றைய செய்திகள்

வடக்கு மாகாணத்துக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்! – ஆளுநரிடம் தூதுவர் உறுதி.

திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அரிச்சல் முனையில் பிரதமர் மோடி!

வவுனியா – திருமலை வீதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.

சந்திரயான்-3 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்!

கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை

தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! – ‘மொட்டு’வில் பலருக்குப் பதவிகள்.

நேபாள பிரதமரைச் சந்தித்த ரணில்! – இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சு.

கோடிக் கணக்கான சொத்துகளை தீயிட்டு கொளுத்த ஒப்பந்தம் போட்டவர் பெல்ஜியத்தில் வாழும் யாழ்பாண பெண்னொருவராம் …

Leave A Reply

Your email address will not be published.