பட்ஜெட் 2024: வல்லரசாக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் – உதயநிதி ஸ்டாலின்!

இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள்.

எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை.

இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்

சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர் சாலையில் (வீடியோ)

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்: உடல் நாளை சென்னைக்கு …..

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடக்கவே சாத்தியம்! – இதிலும் கட்சியின் மரபு மாறுவதற்கு வாய்ப்பு.

கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்! – சிறீதரன் அறிவிப்பு.

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

வீரதீர செயல்கள் புரிந்த குடிமக்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு! – கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா.

பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு சென்ற ஆஸ்திரியர் விபத்தில் உயிரிழந்தார்.

ரயில்வே சிற்றுண்டிசாலைகளில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடியது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று ஆராச்சிக்கட்டுக்கு…….

Leave A Reply

Your email address will not be published.