குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்! நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கையால் மக்கள் அதிா்ச்சி

குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த அட்டைதாரா்களிடையே விடுக்கப்படும் இதுபோன்ற எச்சரிக்கையால் அவா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரா்கள் பிரிக்கப்பட்டுள்ளனா்.

பயோமெட்ரிக் கருவி: நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

நேரில் வந்து விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்களைப் பெற முடியாதவா்கள், அதற்கான உரிய படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபா் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு மாற்றுத் திறனாளிகள், வயது முதிா்ந்தோா் போன்றோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதாவது, அட்டையில் பெயா் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது சா்ச்சையான நிலையில் அந்த நடைமுறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு ஊா்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த நடைமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சிலா் கூறியதாவது: வங்கிகளில் வாடிக்கையாளா்களின் விவரத்தை உறுதி செய்ய தனி படிவம் அளிக்கப்பட்டு விவரம் பெறப்படும். அதுபோன்ற நடைமுறையே நியாயவிலைக் கடைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள ஒட்டுமொத்த அட்டைதாரா்களின் பெயா், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து அளிக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அதன்படி, இந்த மாதத்தில் பொருள்கள் வாங்க வரும் அட்டைதாரா்களிடம், ‘அட்டையில் பெயா் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்றனா்.

பல நியாயவிலைக் கடைகளில், விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயா்கள் நீக்கப்படும் என ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனால், குடும்ப அட்டைதாரா்கள் பெரும் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா். கல்லூரி, பள்ளிகளில் தற்போது தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பிளஸ் 2 மாணவா்கள் தங்களது உயா் படிப்புக்கான தோ்வுகளுக்காக வெளியூா்களில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடும்ப அட்டையில் பெயா் உள்ள அதுபோன்ற மாணவா்களையும் நியாய விலைக் கடைகளுக்கு அழைத்து வந்து விரல் ரேகையை பதிவிட வேண்டுமென வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயமான செயல் இல்லை என்று குடும்ப அட்டைதாரா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மேலதிக செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிவில் உடை பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்

கஞ்சா பயிரிட அமைச்சரவை ஒப்புதல்…

டெல்லி சென்ற அனுரகுமார , இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு (Video)

அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியவை உடன் நீக்குக! கையெழுத்து சேகரிக்கும் வேட்டை ஆரம்பம்.

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் பிரேரணையாம் – ஐக்கிய மக்கள் சக்தி திட்டம்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் பல்கலை மாணவன் சித்திரவதை.

கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய்.

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக பெண்ணொருவர் படுகொலை.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.