அரசு பேருந்துகளில் இனி திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்: டெல்லி முதலமைச்சர்

டெல்லியில் அரசு பேருந்துகளில் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் ஏராளமானோர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த திட்டத்தை திருநங்கைகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான அறிவிப்பை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”நமது சமூக சூழலில் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் மனிதர்கள்தான், சமமான உரிமைகளைப் பெற்றுள்ளவர்கள்.

எனவே, அரசு பேருந்துகளில் அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், இதற்கான ஒப்புதலை அமைச்சரவை விரைவில் அளிக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, திருநங்கைகளுக்கு மிகப்பெரும் பலன் அளிக்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிவில் உடை பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்

கஞ்சா பயிரிட அமைச்சரவை ஒப்புதல்…

டெல்லி சென்ற அனுரகுமார , இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு (Video)

அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியவை உடன் நீக்குக! கையெழுத்து சேகரிக்கும் வேட்டை ஆரம்பம்.

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் பிரேரணையாம் – ஐக்கிய மக்கள் சக்தி திட்டம்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் பல்கலை மாணவன் சித்திரவதை.

கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய்.

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக பெண்ணொருவர் படுகொலை.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்! நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கையால் மக்கள் அதிா்ச்சி

Leave A Reply

Your email address will not be published.