சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா (37) சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவருடைய தந்தை சாயண்ணா மரணத்திற்கு பின் அரசியலுக்கு வந்த நந்திதா சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நந்திதா இன்று காலை பாசராவிலிருந்து கட்ச்பவுளிக்கு காரில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த கார் சுல்தான்பூர் அருகே சாலை தடுபான் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த நந்திதாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்திதா உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்த கட்சி தலைவர்கள், நந்திதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (36) இன்று (பிப்.23) காலை ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காரை 130 கி.மீ வேகத்தில் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த தெலங்கானா மாநில தேர்தலில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் இருந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் லாஸ்யா நந்திதா (36). இவர் பாஜக வேட்பாளரை விட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதே தொகுதியில் பிஆர் எஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த சாயண்ணா என்பவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். ஆதலால், சாயண்ணாவின் மகளான லாஸ்யாவிற்கு பிஆர்எஸ் கட்சி இம்முறை சீட் வழங்கியது.

இளம் வயது எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா, இன்று அதிகாலை 5 மணியளவில், தனது உதவியாளர் அசோக்குடன் மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செகந்திராபாத் வெளி வட்ட சாலையில் இவர்களின் கார் வேகமாக சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, பட்டான் செருவு எனும் இடத்தில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு லாரியை முந்திய போது கார் நிலை தடுமாறி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் 2 பல்டிகள் அடித்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உதவியாளரே காரை ஓட்டியதால் அவர் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவியாளர் அசோக்கை பட்டான் செருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து பட்டான் செருவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கார் சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் அலட்சியமாக ஓட்டியதும், கார் சீட் பெல்ட்டை எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா அணியாததும் அவர் மரணத்திற்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

023ல் தனது தந்தையார் சாயண்ணா மரணமடைந்ததை தொடர்ந்து செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் பிஆர் எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.

மேலதிக செய்திகள்

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆர். ஆர். காலமானார்!

ராவணன் அருவியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம்.

நெதர்லாந்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்…தேர்தல் ஆணையர் சென்னை வருகை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் கைது.

IMF சீர்திருத்தங்கள் சரியாக செய்யப்படாவிட்டால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் ஒருவர் கைது.

போராடினால் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை – விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு!

த.வெ.க. முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டம்!

சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் இம்முறை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கக்கூடாது! – இராமேஸ்வரம் விசைப் படகுச் சங்கத் தலைவர் கோரிக்கை

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு! – இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

Leave A Reply

Your email address will not be published.